Thyagaraja Temple Tiruvottiyur Recruitment 2022 திருவொற்றியூர் கோவிலில் பணி வாய்ப்பு...!

திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் காலியாக உள்ள ஓட்டுநர், தபேதார் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இறை நம்பிக்கை, இந்து மதத்தை சார்ந்தவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

நிர்வாகம் : அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

மேலாண்மை : மாநில அரசு

கோவிலில் ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் வேலை...!

பணி விவரம்

· தபேதர்

· ஓட்டுநர்

· உதவி மின் பணியாளர்

· வேதபாராயணம்

· காவலர்

· உதவி பரிச்சாரகம்

· உதவி சுயம்பாகம்

· சமையலர்

· சமையல் உதவியாளர்

· தூய்மை பணியாளர்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.12.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 12

ஊதியம்

· தபேதர்

ஊதியம்: Rs.15900-50,400/-

· ஓட்டுநர்

ஊதியம்: Rs.18500-58600/-

· உதவி மின் பணியாளர்

ஊதியம்: Rs.16600-52,400/-

· வேதபாராயணம்

ஊதியம்: Rs.15,700-50,000/-

· காவலர்

ஊதியம்: Rs.15,000-50,400/-

· உதவி பரிச்சாரகம்

ஊதியம்: Rs.10,000-31,500/-

· உதவி சுயம்பாகம்

ஊதியம்: Rs.10,000-31,500/-

· சமையலர்

ஊதியம்: Rs.10,000-31,500/-

· சமையல் உதவியாளர்

ஊதியம்: Rs.6,900-21,500/-

· தூய்மை பணியாளர்

ஊதியம்: Rs.4,200-12,900/-

கல்வித்தகுதி

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் இருப்பது அவசியம்.

தபேதார் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவி மின் பணியாளர் எலக்ட்ரிகல் வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ. படிப்பு முடித்திருக்க வேண்டும்.

காவலர் பணிக்கு விண்ணப்பிக்க, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

உதவி சுயம்பாகம் பணிக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

உதவி பரிச்சாரகம் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேதபாராயணம் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

உதவி சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

தூய்மை பணியாளர் பணிக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உதவி ஆணையர்/ செயல்அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை-1 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.12.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும். அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதார்களில், தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலுக்கான அறிவிப்பு விவரம் அனுப்பப்படும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

டோன்ட் பர்கெட்...!

இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ் நகல் உடன் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணலுக்கு அசல் சான்றிதழ் உடன் வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி சான்றுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மறக்காதீங்க...!

· விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

· ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, தொடர்புடைய பதவியை குறிப்பிட்டு தனித்தனியே விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

· ஒரு விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

· விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.

· விண்ணப்பங்களை அனுப்பும் போது மேலுறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/81/704/document_1.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRC Thyagaraja Temple Recruitment 2022: The Department of Hindu Religious Charities has published an employment notification for various vacancies in Thyagaraja Swamy Temple, Thiruvottiyur. If you belong to the faith and Hindu religion, you can apply for these jobs.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X