தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள இயக்குநர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.47 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Personal Assistant to Director மற்றும் Assistant
மொத்த காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள், சட்டத் துறையில் பட்டம் பெற்றவர்கள், முதுநிலைப் பட்டம், ICWA, CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.26,000 முதல் அதிகபட்சம் ரூ.47,000 ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
"The Secretary, Tamil Nadu
Electricity Regulatory Commission, 4
th Floor, SIDCO Corporate Office Building,
Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai - 600 032
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnerc.gov.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கைக் காணவும்.


Click it and Unblock the Notifications












