தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.78 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவி கணக்கு அலுவலர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 18
பணியிடம் : தமிழ்நாடு
கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு Chartered Accounts துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
- 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.56,300 முதல் ரூ.1,78,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2021 முதல் 16.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.2000, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tangedco.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












