தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் காலியாக உள்ள தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் திரைப்படக் கருவி இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
நிர்வாகம் : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணி மற்றும் பணியிட விபரம்:-
தொழில் நுட்ப உதவியாளர் - 01
திரைப்படக் கருவி இயக்குபவர் - 01
கல்வித் தகுதி:-
தொழில் நுட்ப உதவியாளர் : எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளோமா அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திரைப்படக் கருவி இயக்குபவர் : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :-
விண்ணப்பதாரர் 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.19500 முதல் ரூ.62000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வி மற்றும் பணி முன் அனுபவ தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு, சான்றிதழ்களின் நகல்களுடன் 22.01.2021 மாலை 5 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல்.
கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tndipr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.