தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 123 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.1.15 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொறியியல் துறை பயின்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 123
பணி : உதவிப் பொறியாளர் (Civil, Mechanical, Electrical, Computer)
காலிப் பணியிடம் : 23
ஊதியம் : மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரையில்
பணி : உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 100
ஊதியம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.65,500 வரையில்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No 12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600 010
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 13.12.2019