TNCSC Madurai Clerk Recruitment 2023:தூங்கா நகரத்தில் கொட்டிக் கிடக்கும் பணி வாய்ப்பு...!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மதுரைமண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக, தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர், காவலர், உதவுபவர் ஆகிய பணியிடங்களுக்கு, தகுதி, ஆர்வமுள்ள ஆண்/பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிக்கப்பட்ட பணியிடங்களில், பட்டியல் எழுத்தர்/உதவுபவர் பணிக்கு மட்டும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மதுரை மண்டலம் (Tamil Nadu Civil Supplies Corporation)

மேலாண்மை: மாநில அரசு

மதுரை கேர்ள்ஸ், யூத்ஸ் ப்ளீஸ் கவனிக்கவும்...!

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.01.2023

பணி/ காலிப் பணியிடங்கள் விவரங்கள்

ü பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal bill clerk) - 150

ü பருவகால உதவுபவர் (Seasonal Helper)- 150

ü பருவகால காவலர் (Seasonal Watchman) - 150

மொத்த பணியிடங்கள் : 450

வயது வரம்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மதுரை மாவட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, அதிகபட்ச வயது ஜூலை.1,2022படி, 32 வயதாக இருக்க வேண்டும்.

வயது தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளவும்.

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில், பருவகால பட்டியல் எழுத்தர் பதவிக்கு இளநிலை அறிவியல்(B.Sc) வேளாண்மை மற்றும் பொறியல் பட்டம்(Agriculture and Engineering), பருவகால உதவுபவர் பதவிக்கு பிளஸ் 2, பருவகால காவலர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

v பருவகால பட்டியல் எழுத்தர் - ரூ.5,285/- + ரூ. 3,499/- + ரூ.120

v பருவகால உதவுபவர் - ரூ.5,218/- + ரூ.3,499/- + ரூ.100

v பருவகால காவலர் - ரூ.5,218/- + ரூ.3,499/- + ரூ.100

v அதாவது ஊதியத்துடன், பஞ்சப்படி, பயணப்படி சேர்த்து வழங்கப்படும்.

v இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

v விண்ணப்பதாரர்கள் மதுரை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும்.

v ஆர்வமும், ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் வாயிலாக, அஞ்சல் வாயிலாக(ஆஃப்லைன்) விண்ணப்பிக்க வேண்டும்.

v விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், ஜன.,10 அன்று மாலை 5:00 மணிக்குள் அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும். அதன் பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

* மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,

எண்:10, குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், மதுரை- 625020.

நோட் இட் ப்ளீஸ்...!

* பதவியின் பெயரை விண்ணப்ப உறை மற்றும் விண்ணப்பத்திலும் தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

* ஒரு நபர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

* ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு ஒரே நபரது விண்ணப்பங்கள் வரப்பெற்றால், அது முற்றிலும் நிராகரிக்கப்படும்.

* விண்ணப்பங்கள் வேண்டிய கடைசி நாள் ஜனவரி 1, 2023.

* தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தெரிவு செய்யப்படுவர். நேர்காணல் ஜனவரி 18 முதல் ஜனவரி 24 வரை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரியில் நடைபெறும்.

* விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் வரவில்லை என்றாலும், உரிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
450 Jobs in Civil Supply Office: Eligible and interested candidates can apply for 450 vacancies in Madurai Zone of Tamil Nadu Consumer Goods Trading Corporation.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+