தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1598 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்று, தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher
காலிப் பணியிடங்கள் : 1598
கல்வித் தகுதி :
12-வது தேர்ச்சியோடு தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2021 முதல் 25.04.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொதுப் பிரிவினருக்கு ரூ.500
- எஸ்.சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் வழியில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.