TRB TN 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் 2098 தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2098 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.16 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TRB TN 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் 2098 தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Post Graduate Assistants / Physical Education Directors Grade - I & Computer Instructor Grade I

காலிப் பணியிடங்கள் : 2,098

கல்வித் தகுதி :

Post Graduate Assistant, Physical Director Grade I, Computer Instructor Grade I உள்ளிட்ட பணியிடங்களுக்கு அங்கீகாரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தாரர் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில் மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.03.2021 முதல் 25.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ.500
எஸ்.சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் வழியில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TRB Recruitment 2021: Apply online for PG Assistants and various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X