விளையாட்டு பல்கலையில் பயிற்சியாளர் வேலை
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள சிலம்பம், களரிப்பயிற்று பயிற்சியாளர் பணியிடங்களுக்கு, தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த பணியிடங்களுக்கு, நவம்பர் 16க்குள் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்(tnpesu)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
· களரிப்பயிற்று பயிற்சியாளர்
· சிலம்பம் பயிற்சியாளர்
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.11.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 2
கல்வி தகுதி
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30-10-2022படி, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
· SC/ST விண்ணப்பதாரர்கள் - ரூ. 250/-
· பிற விண்ணப்பதாரர்கள் - ரூ. 100/-
பணம் செலுத்தும் முறை: டிமாண்ட் ட்ராப்ட்(Demand Draft)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.11.2022. அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மாதிரியை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து அஞ்சல் வழி முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன்,
பதிவாளர்,
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்,
மேலக்கோட்டையூர்,
சென்னை - 600127
என்ற முகவரிக்கு 16-11-2022 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.


Click it and Unblock the Notifications












