தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் (TN MRB) காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 173
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
- Siddha - 112 காலியிடங்கள்
- Ayurvedha - 05 காலியிடங்கள்
- Homeopathy - 13 காலியிடங்கள்
- Unani - 08 காலியிடங்கள்
- Yoga மற்றும் Naturopathy - 35 காலியிடங்கள்
கல்வித் தகுதி : அரசு, மருத்துவ கவுன்சிலால் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Yoga மற்றும் Naturopathy, Unani, Homoeopathy, Ayurveda, Siddha என பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.07.2020 தேதியன்படி அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.1,77,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
Siddha - இங்கே கிளிக் செய்யவும்.
Ayurveda - இங்கே கிளிக் செய்யவும்.
Homoeopathy - இங்கே கிளிக் செய்யவும்.
Unani - இங்கே கிளிக் செய்யவும்.
Yoga & Naturopathy - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 26.10.2021 முதல் 10.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே 14.08.2021 அன்று வெளியான இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.10.2021 முதல் 10.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












