தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 76 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு ரூ.57 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
பணி : சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)
மொத்த காலிப் பணியிடங்கள் : 76
கல்வித் தகுதி : நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 24.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.600
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications
