2,553 டாக்டர் வேலை ரெடி...! உடனடியா அப்ளை பண்ணுங்க....!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 பொது மருத்துவர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2,553 பொது மருத்துவர் (Assistant Surgeon - General) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி நேற்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 பொது மருத்துவர் பணியிடங்கள் மாதம் ஊதியம் 56,100 - 1,77,500 என்கிற விகிதத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

2,553 டாக்டர் வேலை ரெடி...! உடனடியா அப்ளை பண்ணுங்க....!!

இந்த பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற எம்ஆர்பி இணையதளத்தில் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் மே மாதம் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ம், மற்றவர்களுக்கு ரூ.1,000-ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு, ஊதியம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் 1,021 உதவி மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Medical Services Recruitment Board Invites Online Application For The Direct Recruitment For The Below Mentioned Post In Tamilnadu Medical Service Carrying The Scale Pay Of Noted Against On Temporary Basis
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+