TN Assistant Surgeon Recruitment 2022:தமிழ் தெரிந்தால் தான் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலை...!

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலை அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தற்காலிக அடிப்படையில், இந்த பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, அக்டோபர் 11 ஆம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

1021 அசிஸ்டென்ட் சர்ஜன் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

1,021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board(MRB)

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் எண்ணிக்கை: 1021

பணி விவரம்

உதவி அறுவை சிகிச்சை நிபுணர்(Assistant Surgeon (General)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 25.10.2022

கல்வி தகுதி§ எம்.பி.பி.எஸ்.,

தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெட்ராஸ் மெடிக்கல் பதிவு சட்டம்-1914இன் கீழ் பதிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.

§ பயிற்சி மருத்துவராக, குறைந்தபட்சம் 12 மாதங்கள் பணிபுரிந்து இருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில், பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஊதியம்

நிலை 22 இன் படி, குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.1,77,500 வரை மாத ஊதியம் என்ற முறையில் வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2022 தேதியின் படி, அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு, சலுகை உள்ளிட்ட இன்ன பிற விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம்

SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500; மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

Ø கடந்த 2020 ஆம் ஆண்டு, மே 22ல் வெளியான அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதால், அப்போது விண்ணப்பித்தவர்கள் தற்போது வெளியாகியுள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Ø ஏற்கெனவே தேர்வு கட்டணத்தை செலுத்திய விண்ணப்பதாரர்கள் மீண்டும் தேர்வு கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

Ø அறிவிப்பு வெளியான அக்.,11 முதல் அக்.25 வரை, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Ø நவம்பர் மாதத்தில், விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி / எழுத்துத் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Ø தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Ø தமிழ் மொழி தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு 1 மணி நேரத்துக்கு, 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

Ø இதில் அனைத்துப் பிரினரும் 40 சதவீத மதிப்பெண்களை பெற வேண்டியது கட்டாயம். அப்போது தான் மருத்துவ தேர்வுக்கான தாள் திருத்தப்படும்.

Ø கணினி வழித் தேர்வு / எழுத்துத் தேர்வு 2 மணி நேரங்களுக்கு நடைபெறும்.

Ø மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

Ø எஸ்சி/ எஸ்சி அருந்ததியர் / எஸ்டி பிரிவினர் 30 சதவீத மதிப்பெண்களை பெற்றால் போதும்.

1021 அசிஸ்டென்ட் சர்ஜன் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

விண்ணப்பிக்கும் முறை

Ø தேர்வர்கள் http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தை 'க்ளிக்' செய்ய வேண்டும்.

Ø முகப்புப் பக்கத்தில் Online Registration என்பதை 'க்ளிக் செய்யவும்.

Ø Assistant Surgeon (General) என்ற பதவியை 'க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Ø மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி கட்டாயமாகும்.

Ø அனைத்துத் தகவல்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும்.

Ø வண்ணப் புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து ஆகியவற்றையும் தேர்வர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம்.

Ø கேட்கப்பெற்ற உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனில், விண்ணப்பம் முழுமை பெற்றதாக கருதப்படாது.

v தேர்வு தேதி, வயது வரம்பில் சலுகை உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

கிளிக் பண்ணுங்க....

http://mrb.tn.gov.in

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
1021 Assistant Surgeon Job Notification: The Medical Staff Selection Board has published the notification for 1021 Assistant Surgeon posts vacant across the state. The people applying for these jobs must know Tamil and they have issued an action notification that the examination will be conducted in Tamil.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+