தமிழக சட்டபேரவை துப்புரவு பணிக்கு பி.இ, எம்பிஏ இடையே கடும் போட்டி!

தமிழக சட்டப்பேரவையில் துப்புரவுப் பணியாளர்களுக்கான வேலைக்கு பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி உள்ளிட்ட பல பட்ட மேற்படிப்புகளை முடித்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் துப்புரவுப் பணியாளர்களுக்கான வேலைக்கு பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி உள்ளிட்ட பல பட்ட மேற்படிப்புகளை முடித்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக சட்டபேரவை துப்புரவு பணிக்கு பி.இ, எம்பிஏ இடையே கடும் போட்டி!

சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 10 சுத்தம் பராமரிப்பவர் மற்றும் 04 துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் இதில் அறிவிக்கப்பட்டிருந்தன.

இப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ. 50000 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. 2018 செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வேலை வாய்ப்பு விளம்பரத்தினைத் தொடர்ந்து அக்டோபர் 25ஆம் தேதிவரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் விண்ணப்பித்தவர்களின் கல்வித் தகுதி அடங்கிய விவரங்களை தமிழக சட்டப்பேரவை இணையதளத்தில் அரசு வெளியிட்டுள்ளது.

இதில், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்ட இப்பணியிடங்களுக்கு பி.இ, எம்.காம், எம்.எஸ்.சி, எம்.பி.ஏ என பட்ட மேற்படிப்புகள் படித்த பட்டதாரிகள் பலரும் இந்த துப்புரவு பணியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதில், விண்ணப்பித்த 4,600 பேரில், 3,930 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Legislative Assembly Recruitment 2018 - B.E, MBA degree holder Applied Sweeper and Sanitary Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+