கோவை மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 85 பணியிடங்கள் உள்ள நிலையில் இதில் தேர்வு செய்யப்படுவோர் ரூ.14 ஆயிரம் முதல் 47 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் பணியில் அமர்த்தப்படுவர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கோவை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - கூட்டுறவுச் சங்கம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 85
வயது வரம்பு:-
- விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. (அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க)
ஊதியம் : ரூ. 14,000 முதல் ரூ. 47,500 வரையில்
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.cbedrb.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 16.09.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 (விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.cbedrb.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் அல்லது மேலே உள்ள அறிவிப்பு இணைப்புகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












