அரசு வேலைக்கு தகுதியற்ற பட்டியல் 2023: அம்மாடியோவ்…! 58 படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை?

தகுதியற்ற படிப்புகள் பட்டியல் 2023

தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்கு இணையான கல்வி தகுதி சார்ந்த விவரங்களை, உயர் கல்வித் துறை வெளியிட்டது. அவற்றில் மாநிலத்தில் இயங்கி வரும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் 58 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை அரசுப் பணிகளுக்கு இணை கல்வித் தகுதிகளாக கொள்ள முடியாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதியற்ற படிப்புகள் பட்டியல் வெளியீடு..!

பட்டியல் என்ன

Not - Equivalent Degreee

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் வழங்கும், B.Sc., Special Education and physics மற்றும் B.Sc. Special Education and Rehabilitation of physics பட்டமும், காலிகட் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., Physics (With main and subsidiaries 1. Mathematics 2. Chemistry) பட்டமும், குஜராத் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., (Special) Physics பட்டமும் அரசு பொதுப் பணிகளுக்கு கோரப்பட்டுள்ள B.Sc. Physics கல்வித் தகுதிக்கு இணையாக கொள்ள முடியாது.

B.Sc. Botany-ஐ கல்வித் தகுதியை கொண்ட அரசு பொது பணிகளுக்கு திருவள்ளூர் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., Biotechnology பட்டமும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., B.Ed. (4 year integrated Programme) பட்டமும், பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., Agri Biology பட்டமும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc., (Botany, Biotechnology, Chemistry) மற்றும் B.Sc., (Botany, Zoology, Chemistry) உள்ளிட்டவையை இணை கல்வி தகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Want to know about Not - Equivalent, Equivalent Degrees List

மேலும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (திருச்சி) வழங்கும் M.Sc., Applied Science (Applied Electronics), மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் M.Sc., Electronics and Communication ஆகிய பட்டங்கள் அரசுப் பணிகளுக்கு கோரப்பட்டுள்ள M.sc Physics கல்வித் தகுதிக்கு இணையாக கருத முடியாது.

சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் B.A., Co. operation படிப்பு B.com படிப்புக்கு இணை கல்வி தகுதியாக கொள்ளப்பட மாட்டடது. அதேபோல், பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் M.Sc.Information Technology படிப்பு M.C.A படிப்புக்கு இணையாக கொள்ள முடியாது.

பல்வேறு கல்வித் தகுதி சார்ந்த விவரங்கள் உயர் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. விவரங்களை அறிய ஆவல்? கிளிக் ப்ளீஸ்...!

https://www.tn.gov.in/whatsnew/impt

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Not Equivalent Degrees List 2023: The higher education department has published the details of educational qualifications equivalent to various jobs of the Tamil Nadu government. Let's take a closer look at what that list is.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+