தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1.96 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள நிறுவன செயலாளர், மேலாளர் உள்ளிட்ட 40 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிறுவன செயலாளர், மேலாளர், தொழில்நுட்ப நிர்வாகி, என்ஸ்-ரே உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 40 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1.96 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 40

பணியிடம் : தமிழ்நாடு

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-

பணி : நிறுவன செயலாளர் - 01
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று ஏசிஎஸ் முடித்து ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் நிறுவனத்தின் செயலாளராக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிஏ, ஐசிடபுள்யூஏ முடித்திருந்தால் கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

பணி : மேலாளர் (இரசாயனம்) - உற்பத்தி - 01
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்.எஸ்சி முடித்து நவீன சிமெண்ட் ஆலையில் 18 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் துறைத் தலைவராகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : மேற்கண்ட 3 பணிகளுக்கும் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.61,900 முதல் ரூ.1,96,700 வரையில் வழங்கப்படும்.

பணி : தொழில்நுட்ப நிர்வாகி (இயந்திரம்)- 11
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்று செங்குத்து உருளை கொண்ட ஒரு சிமெண்ட் ஆலையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரையில்

பணி : CCR Operators - 16
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது டிப்ளமோ, அல்லது வேதியியல் துறையில் பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டு நவீன சிமெண்ட ஆலைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : என்ஸ்-ரே துறை - 06
பணி : Shift Chemist - 05
கல்வித் தகுதி : வேதியியல் துறையில் பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்து நவீன சிமெண்ட் ஆலையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,600 முதல் ரூ.1,12800 வரையில்
வயது வரம்பு : மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.tancem.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் இட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

(விண்ணப்பத்தின் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணிக்கான பெயரை குறிப்பிடுவது அவசியம்.)

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Senior Manager/Dy. Collector
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,No.735, Anna Salai,
Chennai 600 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 01.10.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tancem.com/wp-content/uploads/2019/09/HRMS-52-7-9-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Govt Jobs: Recruitment in TANCEM 2019 – Apply Online For Technical Executive Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+