TNSTC Driver Recruitment 2023: போக்குவரத்து துறையில் டிரைவர் பணி நியமன அறிவிப்பு..?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு, ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வைக்கப்படும் தேர்வில் 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். கும்பகோணம் கோட்டத்துக்கு 174 பேரும், சேலம் கோட்டத்துக்கு 254 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 60 பேரும், மதுரைக்கு 136 பேரும் ,திருநெல்வேலிக்கு 188 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன.

போக்குவரத்து துறையில் முக்கிய அறிவிப்பு தெரியும்...?

இந்த நிலையில் விரைவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் கும்பகோணம், கோயம்புத்தூர்,சேலம், திருநெல்வேலி , மதுரை ஆகிய கோட்டங்களில் 1,602 காலி பணியிடங்கள் இருந்தன. இதில், 1,422 பணியிடங்கள் நிரப்ப போக்குவரத்து வாரியம் பரிந்துரை செய்தது.

தற்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 பேரை தேர்வு செய்யப்பட உள்ளதாக, அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் கும்பகோணம் கோட்டத்திற்கு 174 பேரும், சேலம் கோட்டத்திற்கு 254 பேரும், கோயம்புத்தூருக்கு 60 நபர்களும், மதுரைக்கு 136 நபர்களும், திருநெல்வேலிக்கு 188 நபர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இப்பணிகளுக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்; கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் நடத்துனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு....

https://www.tn.gov.in/

http://www.stationeryprinting.tn.gov.in/gazette/gazette_list.php

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSTC Recruitment Driver Conductor 2023: The Government of Tamil Nadu has issued an order to fill the vacant posts of Driver and Conductor in the Tamil Nadu State Transport Corporation known as TNSTC. Be ready...Youth's opportunity is in your hands...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+