தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள சாகர் மித்ரா பணியிடங்களை நிரக்கிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 608 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு மீன் வள அறிவியல், கடல் உயிரியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Sagar Mitra
மொத்த காலிப் பணியிடங்கள் : 608
கல்வித் தகுதி:
மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் போன்ற ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.10,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.fisheries.tn.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.02.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.fisheries.tn.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












