தமிழக வனத்துறையில் காலியாக உள்ள Internship Programme, Junior Research Fellowship பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழக வனத்துறை (TN Forest)
மொத்த காலிப் பணியிடங்கள் : 11
பணி : Internship Programme, Junior Research Fellowship
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Research Fellowship - Research பணிகளில் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Internship Programme - 1 முதல் 3 மாதங்கள் வரையிலான பயிற்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு : Junior Research Fellowship பணிக்கு அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டும், Internship Programme பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :
- Internship Programme - 30.11.2021
- Junior Research Fellowship - 05.12.2021
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aiwc.res.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பர இணைப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












