ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறை வேலை வேண்டுமா?

தமிழக வனத்துறையில் உள்ள வனக் காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.

By Saba

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 564 வனக் காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறை வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : வனக் காவலர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 564

கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனத்தில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 மற்றும் சேவைக் கட்டணம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியக் குறிப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு மூன்று மாதத்திற்குள் எடுக்கப்பட்ட (4.5cm x 3.5cm JPG/JPEG Format of size 20-50 KB), கையெழுத்து (பெரிய எழுத்தில் இருக்கக்கூடாது (JPG/JPEG Format of size 10-20 KB), சாதிச்சான்றிதழ் (50-500 KB PDF File) ஆன்லைனில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் கையால் எழுதப்பட்ட உறுதிமொழி கடிதம் ஒன்றையும் (50-500 KB PDF File) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உறுதிமொழி கடிதத்தில், 'இந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை. இந்த விண்ணப்பத்தைப் பொறுத்தவரை எதுவும் மறைக்கப்படவில்லை. தேர்வுக்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு அல்லது உண்மைக்குப் புறம்பானது அல்லது தகுதியின்மை என அறியும்பட்சத்தில் எனது விண்ணப்பம் தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நிராகரிக்கப்படும் என்பதற்கு உடன்படுகிறேன்' என எழுதி கையொப்பமிட்டு ஸ்கேன் செய்து பதிவேற்ற செய்ய வேண்டும்.

07.03.2019 ஆம் தேதிக்கு முன் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட தகுதியான விளையாட்டுச் சான்றிதழ் இருந்தால் பதிவேற்றம் செய்யலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.forests.tn.gov.in அல்லது https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Forest Recruitment 2019 Apply Online (564 Forest Watcher Vacancies)
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+