8-வது தேர்ச்சியா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு துறையில் பணியாற்றலாம் வாங்க!

தமிழக அரசு மீன்வளத்துறையில் (Tamilnadu Fisheries Department) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.58 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
8-வது தேர்ச்சியா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு துறையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழக அரசு மீன்வளத்துறை (Tamilnadu Fisheries Department)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி :

  • மத்திய, மாநில அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பத்தாரர்கள் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.58,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மீன்வள மற்றும் மீனவர் நல ஆணையர், ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வள அலுவலக வளாகம், நந்தனம், சென்னை - 35

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fisheries.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Fisheries Department Recruitment 2021: Application invited for Office Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X