தமிழக அரசு மீன்வளத்துறையில் (Tamilnadu Fisheries Department) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.58 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழக அரசு மீன்வளத்துறை (Tamilnadu Fisheries Department)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி :
- மத்திய, மாநில அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பத்தாரர்கள் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.58,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மீன்வள மற்றும் மீனவர் நல ஆணையர், ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வள அலுவலக வளாகம், நந்தனம், சென்னை - 35
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fisheries.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












