தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் (TN Fisheries) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை (TN Fisheries)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : ஊர்தி ஓட்டுநர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி :
- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணியில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- 01.07.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnfisheries.com அல்லது அதிகாப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Executive Engineer,
Fishing Harbour Project Division,
Integrated Animal Husbandry and Fisheries
and Fishermen Welfare Department Office Complex,
Nandanam, Chennai- 600 035.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.fisheries.tn.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












