தமிழ்நாட்டில், பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி துவங்குகிறது. அன்று முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்கு பிறகு, பொதுப் பிரிவினருக்கு 7ஆம் தேதி துவங்கும் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கலந்தாய்வு செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளது.
முதலாம் ஆண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க். பட்டப் படிப்பிற்கு மே.5 முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு, தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு நடைபெற துவங்கி உள்ளன.

மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேண்டம் எண் ஒதுக்கீடு எப்போது ?
இந்நிலையில், ஜூன் 7ஆம் தேதி ரேண்டம்' எண் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஜூன் 12 முதல் 30ஆம் தேதி வரை, டிஎஃப்சி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளன. குறை தீர்ப்பு முகாம்கள் ஜூலை 13 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி துவங்குகிறது. 5ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்குப் பிறகு, பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் 7ஆம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வு செப்டம்பர் 24 வரை நடைபெறவுள்ளன.
துணை கலந்தாய்வு....!
பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன.
விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
விண்ணப்ப பதிவு கட்டணம்
பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள், " "The Secretary TNEA" payable at Chennai.. என்ற பெயரில் இன்று முதல் வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம்- ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250.
கூடுதல் விவரங்களுக்கு
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: [email protected]


Click it and Unblock the Notifications












