தமிழக அரசில் காத்திருக்கும் அற்புதமான வேலையிடங்கள்...!!

தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், நேரக் காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31.01.2024-க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

இந்த பெருமைவாய்ந்த தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தில்தான் தற்போது இந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

ஜூனியர் மெக்கானிக் (Junior Mechanic) பிரிவில் ஒரு காலியிடம் உள்ளது.
கல்வித் தகுதி : இந்தப் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.19,500 - ரூ.71,900 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

தமிழக அரசில் காத்திருக்கும் அற்புதமான வேலையிடங்கள்...!!

ஜூனியர் எலக்ட்ரீஷியன் (Junior Electrician) பிரிவில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி : இந்தப் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,500 - ரூ.71,900 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

அசிஸ்டெண்ட் ஆப்செட் மெஷின் டெக்னீஷியன் (Assistant Offset Machine Technician) பணியிடங்கள் பிரிவில் 19 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க Diploma in Printing Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,500 - ரூ.71,900 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

ஸ்பெஷல் லேங்குவேஜ் டிடீபி ஆப்பரேட்டர் (Special Language DTP operator) பிரிவில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி : இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க BCA or BSc Computer Science/ Information Technology படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.35,600 - ரூ.1,30,800 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

டைம் கீப்பர் (Time Keeper) பிரிவில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி : இந்தப் பணிக்கு10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.18,200 - ரூ.67,100 என்ற அடிப்படையில் தரப்படும்.

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்ற http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110, அண்ணா சாலை, சென்னை - 2.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2024

இணையதள முகவரி:

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamilnadu Government has released the Junior Mechanic, Junior Electrician, Assistant Offset Machine Technician, Special Language D.T.P. Operator, and Time Keeper posts in Tamilnadu. District-wise, the Tamilnadu Stationery and Printing Department recruitment notification 2024 was released.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+