8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : Department of Economics and Statistics

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இளநிலை பட்டம் முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.03.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://des.tn.gov.in/node/407 அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை - 600 006

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://des.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Department of Economics and Statistics Recruitment 2021: Apply for various office assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X