ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக நியமிக்கப்பட உள்ளனர். நேர்காணல் டிச.,7ல் நடைபெறவுள்ளது.
நிர்வாகம்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited)
மேலாண்மை: மாநில அரசு

பதவிகள் விவரம்
Ø கால்நடை ஆலோசகர் ( Veterinary Consultant)
விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்
பணியிடங்கள் எண்ணிக்கை
திருப்பூரில் எட்டு பணியிடங்களும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு பணியிடமும் காலியாக உள்ளன.
கல்வி தகுதி / வயது வரம்பு
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், பி.எஸ்.சி., கால்நடை படிப்பில் ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினியை இயக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். வயதில் அதிகபட்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில், கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக, மாதம் ரூ.43,000 வழங்கப்படும். அதாவது, (ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000) என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முறை
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு, டிசம்பர் 7ல் நேர்முக தேர்வு காலை 11 மணி முதல் நடைபெறும்.
நேர்முக தேர்வு நடக்கும் இடம்
வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், வேலூர்-9
திருப்பூர் ஆவினில், நேர்முக தேர்வு நடக்கும் நாள் டிசம்பர் 14ல் காலை 11 மணி முதல் நடக்கும்.
இடம்
வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,
வீரப்பாண்டி பிரிவு,
பல்லடம் சாலை
திருப்பூர்-641 605
நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும்.
ப்ளீஸ் நோட் இட்...!
நேர்காணல் நடைபெறும் நாள் மாவட்டத்துக்கு ஏற்ப நடக்கிறது.
https://www.tnemployment.in/ என்ற வலைதள பக்கத்தில், பணி சார்ந்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications












