தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் வேலை!

Posted By: Kani

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம் வெளியிடப்படவில்லை.

பணி: மேலாளர்

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஐடி, கணினி அறிவியல், விற்பனை மேலாண்மை, வணிகவியல் போன்ற எதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,40,000

பணி: உதவி பொது மேலாளர்

தகுதி: பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,25,000

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Managing Director & CEO
Tamilnad Mercantile Bank Ltd
Head Office, # 57, V. E. Road
Thoothukudi 628 002.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19-05-2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
Tmb Recruitment for General Manager,Deputy General Manager On contract basis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia