தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் வேலை!

Posted By: Kani

தமிழக தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 43 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மூத்த அலுவலர் (நிதி)
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ. 56,100-1,77,500
தகுதி: சிஏ, சிடபுள்ஏ,எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: மூத்த அலுவலர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பிடெக் அல்லது ஏஎம்ஐஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ், எஸ்டி பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி, எம்பிசி & டிசி & டிஏபி பிரிவினர் ரூ. 500, எஸ்சி, எஸ்சி(எ), எஸ்டி  பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
TIIC invites application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia