முத்து நகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சமையல், சலவையாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல் என்ன என்றால் படிக்கவும், எழுதவும் தெரிந்தால் போதும்ங்க... பணி நிச்சயம்...!
நிர்வாகம் : அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனஐ (Thoothukudi Medical College Hospital)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
சமையலர்
சலவையாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 11
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.09.2022
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
நிலை-I (ரூ.15,700 - ரூ.58,100)
விண்ணப்பம், கல்வித்தகுதி, சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை நகலாக இணைக்க வேண்டும்.
தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
வயது வரம்பு
01.04.2022 அன்று பட்டியல் இனங்கள்/பட்டியல் பழங்குடியினர் வயது 18-37 ஆக இருக்க வேண்டும்; பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது - 18-34 ஆகவும், பொதுப் பிரிவினர் 18-32 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் 42க்கு கீழும் இருக்க வேண்டும்.
நோட் இட்...!
முன்னுரிமை அடிப்படையிலான பணியிடங்களுக்கான (அரசாணை) நிலை எண்.122 மனிதவள மேலாண்மைத் (கே.2) துறை, நாள். 02.11.2021)ல் அறிவுறுத்தியபடி, இனசுழற்சி முறை பின்பற்றப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர்,
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
தூத்துக்குடி
விண்ணப்பங்கள் 30.09.2022 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பபங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
சுய விவர குறிப்புடன் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை அஞ்சல் வாயிலாக அனுப்பலாம் அல்லது நேரிலோ சென்று வழங்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்/ பணி அறிவிப்பை அறிய... க்ளிக் ப்ளீஸ்...!
https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/09/2022092053.pdf


Click it and Unblock the Notifications












