Thiruvarur Mega Job Fair 2023
திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் (திருவாரூர்) இணைந்து நடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 5000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு, 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

ஐந்து ஆயிரம் இடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாம் 2023
எங்கே....!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வ.உ.சி., சாலையில் உள்ள மன்னை ராஜ கோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (எம்ஆர்ஜி), மெகா வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் 2:00 மணி வரை நடைபெறுகிறது.
எவ்வளவு இடங்கள் தெரியும்?
முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன.
பத்தாம் வகுப்பு முதல் பி.இ., வரை
இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.
மறக்காதீங்க...!
நேர்காணல் மார்ச் 4 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கே துவங்குகிறது. சீக்கிரம் போங்க... வேலைவாய்ப்பு ஆணையுடன் திரும்பி வாங்க.... ஆல் தி பெஸ்ட்...!
ஆவணங்கள் என்னென்ன?
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/122302130004
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/122302130004


Click it and Unblock the Notifications












