வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : திருவள்ளுவர் பல்கலைக் கழகம்
பணி : பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
காலிப் பணியிட விபரங்கள்:
துறை மற்றும் காலியிட விபரம்:-
பொருளாதாரம் துறையில் 1 பேராசிரியர் உயிர் தொழில்நுட்பம் துறையில் 1 இணை பேராசிரியர் காலியிடங்கள் உள்ளது. கம்ப்யூட்டர் சைன்ஸ், இயற்பியல், வணிகவியல் ஆகிய ஒவ்வொரு துறைகளிலும் தலா 1 பேராசிரியர், 1 இணை பேராசிரியர், 1 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் உள்ளது.
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு ஊதியம், கல்வித் தகுதி உள்ளிட்டவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி நியமிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tvu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்கை காணவும். நேரடியாக இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.