தமிழக சுகாதாரத்துறையின் கீழ் வரும் தென்காசி மாவட்ட சுகாதார சங்கத்தில் பிசியோதெரப்பிஸ்ட் (Physiotherapist) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2024/01/2024011194.pdf என்ற இணையதள லிங்கைக் கிளிக் செய்து அறியலாம்.
பிசியோதெரப்பிஸ்ட் (Physiotherapist) பணிக்கான கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பிஎஸ்சி (B.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசியோதெரப்பிஸ்ட் (Physiotherapist) பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிசியோதெரப்பிஸ்ட் (Physiotherapist) பணிக்கான ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த (Contract) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2024/01/2024011194.pdf என்ற இணையதள லிங்கைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












