தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள உயர்கலவி நிறுவனமான ஐஐடி-யில் உள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியாவில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்கள் (ஐஐடி) அமைக்கப்பட்டு, மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஐஐடி-களில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் பட்டை தீட்டப்பட்ட வைரம் போல் வெளிவந்து சாதித்து வருகின்றனர்.
அந்த வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த ஹைதராபாத் ஐஐடி. இந்த ஹைதராபாத் ஐஐடி-யானது, 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ஆல் (தற்போது மத்திய கல்வித்துறை) புதிதாக அமைக்கப்பட்ட 6 ஐஐடி-களில் ஒன்றாக இது அமைந்தது. 2008-2009-ம் கல்வியாண்டு முதல் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள கண்டியில் இது செயல்பட்டு வருகிறது. 600 ஏக்கர் பரப்பளவில் இந்த ஐஐடி பிரமாண்டமாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த ஐஐடி-யின் இயக்குனர் பேராசிரியர் பி.எஸ். மூர்த்தி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

தற்போது இந்த ஐஐடி-யில் பி.டெக், பி.டெஸ் (பேச்சிலர்ஸ் ஆஃப் டிசைன்), எம்.டெக், எம்.டெஸ், எம்.எஸ்சித, எம்.ஏ. படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
மேலும், மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி (எக்சிகியூட்டிவ் எம்.டெக்), பிஎச்.டி. படிப்புகளும் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த ஐஐடி-யில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இ்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது ஜூனியர் டெக்னீசியன் 27 பணியிடங்கள், ஜூனியர் அசிஸ்டென்ட் 17, ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டன்ட் 10, அக்கவுன்டன்ட் 9, ஸ்டாப் நர்ஸ் 6, டெக்னிக்கல் சூப்பிரண்டன்ட் 4, செக்சன் ஆபிசர் 2 உட்பட மொத்தம் 89 காலி இடங்கள் உள்ளன.
இந்த வேலையிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு என விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ப மாறுபட்டு அமைந்துள்ளது.
டெக்னிக்கல் சூப்பிரண்டன்ட், செக்சன் ஆபீஸர் பணியிடங்களுக்கு 40, மற்ற பணிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் தரப்பட்டுள்ளது.
ஸ்கில் தேர்வு, எழுத்துத் தேர்வு முறையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். அதே நேரத்தில் பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 12ம் தேதி (நவம்பர் 12) ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு staff.recruitment.iith.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












