TNTET 2022 paper 2 exam Results 2023 : 'டெட் பேப்பர் 2' தேர்வு முடிவு வெளியீடு...!

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் - II க்கான முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் மதிப்பெண், பாஸ் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம்

மேலாண்மை : மாநில அரசு

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 ரிசல்ட் ரெடி...!

தேர்வு முடிவு விவரம்

· தாள்-II

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர, மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் வெளியிடப்பட்டது.

6 லட்சம் பேர்

விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக, ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2லட்சத்து 30ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் என, மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்தனர்‌.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாள், கணினி வழி தேர்வு (Computer Based Examination) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 வரை நடத்தப்பட்டது.

காலை, மாலை என இரு வேளைகளில்‌ கணினி வழியில் மட்டுமே தேர்வு நடந்தது. அதைத் தொடர்ந்து தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய உத்தேச விடைக்குறிப்புகள்‌ (Tentative Answer Key) ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளமான

https://trb.tn.nic.in/ என்ற முகவரியில் வெளியிடப்பட்டன.

அதேபோல தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேதியில்‌ எந்த அமர்வில்‌ தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website இல் வெளியிடப்பட்டது.

தேர்வர்கள்‌ வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணைய வழியில்‌, தங்கள் ஆட்சேபனையும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இறுதி விடைக் குறிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்தது.

இதற்கிடையே தாள் 2-க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் https://trb.tn.nic.in/TET_2022/28032023/msg TK.htmஎன்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து, தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்....!

https://trb.tn.nic.in/

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNTET Paper II Exam Results 2023: The Teacher Examination Board has released the Paper-II results for the Teacher Eligibility Test known as 'TET'. Candidates can check their marks details on the official website.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+