டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை ரெடி....!!!

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா (TATA) கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்க விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://ibegin.tcs.com/iBegin/jobs/286613J என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

டாட்டா கன்சல்டன்சி சர்வீஸஸ் லிமிடெட் (Tata Consultancy Services, டிசிஎஸ் ) நிறுவனம் என்பது இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள மென்பொருள் சேவைகள் வழங்கும் அறிவுரைச் சேவை நிறுவனமாக அமைந்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை ரெடி....!!!

இது இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மட்டும் அல்லாமல் வணிகச் செயலாக்க அயலாக்க சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகவும் பெயர் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவின் தேசிய பங்கு சந்தையிலும், மும்பை பங்கு சந்தையிலும் பட்டியலில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

டிசிஎஸ் நிறுவனமானது, ஆற்றல், தொலைத்தொடர்புகள், நிதிச் சேவைகள், உற்பத்தி, வேதிப் பொருட்கள், பொறியியல், மூலப்பொருட்கள், அரசுத்துறை, சுகாதாரத் துறை ஆகிய அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டிவரும் இந்தியாவின் மிகப்பெரியதும் பழமையானதுமான தொழில் குழுமங்களுள் ஒன்றான டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

டாட்டா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் 1968 ஆம் ஆண்டில் தான் நிறுவப் பெற்றாலும், இந்திய தகவல்தொழில்நுட்ப துறையில் இது ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் அந்த நாட்களில் 'உரிம அரசாட்சி' போன்ற எதிர்மறையான அரசு நெறிமுறைகள் இருந்தபோதிலும் இந்த நிறுவனம் இந்திய தகவல் தொழில்நுட்ப தொழிலை நிறுவுவதில் வெற்றிபெற்றுள்ளது.

மற்ற டாட்டா நிறுவனக் குழுமங்களுக்கு கணிப்பொறி சேவைகளை வழங்குவதை முக்கிய தொழிலாகக் கொண்ட டாட்டா குழுமத்தின் ஒரு பிரிவாக "டாட்டா கணினி மையம்" என்ற பெயருடன் இதன் துவக்கம் அமைந்தது. எஃப் சி கோலி இதனுடைய முதல் பொது மேலாளராவார். நானி பல்கிவாலாவைத் தொடர்ந்து ஜேஆர்டி டாட்டா இதன் முதன் தலைவராக பொறுப்பேற்றார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் வேலைகளுள் ஒன்று தனது சகோதர நிறுவனமான டாட்டா எஃகு நிறுவனத்திற்கு (பின்னாளில் டிஸ்கோ) பன்ச் கார்ட் சேவைகளை வழங்குவதாகும்.
இந்த பெருமைமிகு டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில்தான் தற்போது அன்சிபிள் லீட் (Ansible lead) பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து பட்டப்படிப்பு தேவைப்படுகிறது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், 3 முதல் 7 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் விண்ணப்பிக்க முடியும்.

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதியானவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு

https://ibegin.tcs.com/iBegin/jobs/286613J என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TCS has invites applications for post of Ansible lead. TCS has over 500,000 of the world’s best-trained consultants in 46 countries. The company generated consolidated revenues of US $22.2 billion in the fiscal year ended March 31, 2021, and is listed on the BSE (formerly Bombay Stock Exchange) and the NSE (National Stock Exchange) in India. For more details please logon onto
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+