மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான டிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ஸ் இந்தியா (டிசிஐஎல்)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 07
பணி மற்றும் பணியிட விபரங்கள்:-
இளநிலை கணக்கு அதிகாரி : 02
ஊதியம் : ரூ.35,000 முதல் ரூ.87,000 வரையில்
கல்வித் தகுதி : சிஏ, ICWA முடித்து 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை பொறியாளர் (நிதி) : 03
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
கல்வித் தகுதி : சிஏ, சிஎம்ஏ முடித்து தொடர்புடைய பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை பொது மேலாளர் (நிதி) : 02
ஊதியம் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரையில்
கல்வித் தகுதி : சிஏ, சிஎம்ஏ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000.
விண்ணப்பிக்கும் முறை : www.tcil-india.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager(HR), Telecomminications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash-1, New Delhi - 110 048
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 13.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tcil-india.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












