தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Veterinary Graduate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Veterinary Graduate
மொத்த காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி : அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனத்தில் Veterinary Sciences and Animal Husbandry பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : கால்நடை மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை, கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் - 637 002
நேர்முகத் தேர் நடைபெறும் தேதி : 22.02.2021
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.