தமிழக அரசிற்கு உட்பட்ட கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதாற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பட்டதாரி இளைஞர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 07
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
திட்ட உதவியாளர்
காலியிப் பணியிடங்கள் : 02
கல்வித்தகுதி : ஏதேனும் ஓரு Life Science பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : உயிரியில் ஆய்வகத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ. 20,000
திட்ட உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு Life Science பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுப் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ. 20,000
செயலக சேவை திட்ட உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : பிசிஏ, அல்லது Office Automation துறையில் டிப்ளமோ
பணி அனுபவம் : துறை சம்பந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.20,000
ஃபீல்டு வொர்க்கர்
காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : Sample Process Work இல் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,000
முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : அடிப்படை அறிவியலில் முதுநிலைப்பட்டம் மற்றும் CSIR NET தேர்ச்சி,
அனுபவம் : 02 வருட ஆராய்ச்சி அனுபவம்
ஊதியம் : மாதம் ரூ.35,000
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். (நேர்காணலுக்கு வரும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களது முழு சுயவிவரங்கள், கல்விச்சான்றிதழ், புகைப்படம், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வர வேண்டும்.)
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் இடம் :-
Dept. of Veterinary Microbiology,
Madras Veterinary College,
Vepery, Chennai - 600 007
நேரம் : காலை 11 மணி
முதுநிலை உதவி ஆராய்ச்சியாளர் பணிக்கு மட்டும் நேர்காணல் கீழ்காணும் வேறு இடத்தில் நடைபெறும்.
TRPVB,2nd floor,
Central University Laboratory
(CUL) Building, TANUVAS,
Madhavaram Milk Colony, Chennai - 600 051
நாள் : 31 அக்டோபர் 2019, நேரம்: காலை 11 மணி
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












