தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்(தனுவாஸ்-TANUVAS) புராஜக்ட் அசோசியேட் ( Project Associate II) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கூடுதல் விவரங்களுக்கு https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1703767451.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Veterinary and Animal Sciences University - TANUVAS) தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1989ல் இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிந்து தனிப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகமானது முதலில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், தூத்துக்குடி ஆகியன இணைந்து துவக்கப்பட்டது.

பின்னர் தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம் ஆனது தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் உடன் 2012-ல் இணைக்கப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 'தனுவாஸ்' எனும் ஆங்கிலச் சுருக்கத்தில் பிரபலமாக அறியப்படுகிறது. இப் பல்கலைக்கழகம் 20.09.1989 அன்று தமிழ்நாடு மாநில அரசு சட்டம் 42, 1989 மூலம் நாட்டின் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமாக மலர்ந்தது. கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் துறையில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பை வழங்குவதற்காக சென்னை-சைதாப்பேட்டையில் ஒரு வேளாண் பள்ளியாகத் (1876) தொடங்கி, பின் நாளில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியாக (1903) மலர்ந்து பின் நாமக்கல்லில் தொடங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினையும் (1985) உள்ளடக்கி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 20.09.1989 அன்று தென் கிழக்கு ஆசியாவின் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமாக தொடங்கப்பட்டது.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி 01.10.1903 அன்று சென்னை-வேப்பேரியில் டோபின் ஹாலில் செயல்படத் தொடங்கியபோது கல்லூரி அந்தஸ்தைப் பெற்றது. ஜிஎம்விசி (மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பட்டதாரி) என்ற மூன்றாண்டு டிப்ளமோ படிப்பினில் ஆண்டுக்கு 20 மாணவர்கள் என நடத்தப்பட்டது. 1950 களின் நடுப்பகுதி வரை முந்தைய ஒருங்கிணைந்த மதராஸ் மாநிலத்தில் உள்ள ஒரே கால்நடை மருத்துவக் கல்லூரி இதுவாகும்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி (தற்போது தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளது) மற்றும் பிற பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், ஆராய்ச்சி பண்ணைகள், விவசாயிகள் பயிற்சி மையங்கள் மற்றும் நோயறிதல் ஆய்வகங்கள் ஆகியன ஆரம்பத்தில் இப் பல்கலைக்களத்தின் அங்கங்களாக இருந்தன.
ன்னர் கொடுவள்ளியில் உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரியையும், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாட்டில் மேலும் இரண்டு கால்நடை மருத்துவக் கல்லூரிகளையும், ஓசூரில் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியையும், பல பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களையும் (பெரும்பாலான மாவட்டங்களில் அமைந்துள்ளது) நிறுவியது. மதுரையில் ஒரு நோய் கண்டறியும் ஆய்வகம், கூடுதலாக, 2020 ஆம் ஆண்டில் சேலம், தேனி மற்றும் உடுமலைப்பேட்டையில் மேலும் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆகியன நிறுவப்பட்டுள்ளன.
இந்த பெருமைமிகு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்(தனுவாஸ்-TANUVAS) தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுவாஸ் பல்கலைக்கழகம் சார்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate II பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புராஜக்ட் அசோசியேட் ( Project Associate II) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master's Degree in Natural/ Agricultural Sciences/ M.V.Sc அல்லது Bachelor degree in Engineering அல்லது Technology or Medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புராஜக்ட் அசோசியேட் ( Project Associate II) பணியிடங்களுக்கான வயது தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
புராஜக்ட் அசோசியேட் ( Project Associate II) பணியிடங்களுக்கு ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு 9.1.2024-ம் தேதி அன்று நேரில் சென்று எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1703767451.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












