தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொடக்க மற்றும் புதுமை மிஷன் ஆணையத்தில் (Tamil Nadu Startup and Innovation Mission -TANSIM) காலியாக உள்ள Executive Assistant, Programme Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு தொடக்க மற்றும் புதுமை மிஷன் ஆணையம் (TANSIM)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Executive Assistant, Programme Associate
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடார்புடைய பாடங்களில் Graduation, முதுநிலைப் பட்டம், பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
- Executive Assistant, Program Associate - ரூ. 60,000
- Program Lead - ரூ.1,00,000
- Associate Vice President - ரூ.1,50,000
- Vice President - ரூ. 2,00,000
- Program Fellow - ரூ. 15,000 முதல் ரூ. 20,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 27.01.2022 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://startuptn.in/careers/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.