NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!

நான் முதல்வன் குறும்பட திருவிழா 2023

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் குறும்படத் திருவிழா போட்டி குறித்த அறிவிப்பை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெற்றிப்பெறும் குறும்படதாரர்களுக்கு "நான் முதல்வன்" திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் மூன்று மாத 'இன்டெர்ன்ஷிப்', வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும்.

குறும்படம் இயக்க ஆர்வமா? உங்களுக்கான அறிவிப்பு..!

ஆண்டுக்கு 12 லட்சம் பயிற்சி

Ø இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை வழங்கும் நோக்கில், நான் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் வாயிலாக ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சிகளை பெற்று வருகின்றன.

Ø திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு, அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் குறும்படத் திருவிழா அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்...!

மாநில அளவிலான போட்டியில் 14 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள அனைவரும் பங்குபெறலாம்.

தலைப்புகள் அறியலாம்?

ü பள்ளிக் கல்வியில் சிறுவயதிலேயே திறன்மேம்பாடு கல்வி பயிற்சியின் முக்கியத்துவம்.

ü பாரம்பரிய திறன்களை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி இன்றைய சமுதாயத்திற்கு உதவும்?

ü தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கில் பயன்டுத்துவதற்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல்

ü திறன் மேம்பாட்டு கல்வி வேலைகளின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது?

ü டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்கள்.

ü நடைமுறை திறன்பயிற்சிகளின் முக்கியத்துவம் (தொழில்கல்வி).

மேற்குறிப்பிடப்பட்ட ஆறு தலைப்புகளின் கீழ் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கிய 6 நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும்.

தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உள்ள குறும்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும். அது புனைகதை, ஆவணப்படம், அனிமேஷன் போன்ற எந்தவகையிலும் இருக்கலாம்.

பரிசு தொகை எவ்வளவு?

v முதல் பரிசு ரூ.50,000

v இரண்டாம் பரிசு ரூ.25,000

v மூன்றாம் பரிசு ரூ.10,000 என, தேர்வு செய்யப்படும் சிறந்த குறும்படத்துக்கு வழங்கப்படும்.

புகைப்படம் போட்டிக்கான தலைப்பு

"தமிழகத்தில் அழிந்துவரும் பாரம்பரிய திறன்கள்".

வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள்: 01.02.2023.

பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் இடுகையிடுவதன் மூலம் பங்கேற்கலாம் அல்லது [email protected]என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம்.

இதில் வெற்றிப்பெறும் குறும்படதாரர்களுக்கு "நான்முதல்வன்" திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம் & தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் 3 மாத இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.inஇணையதள முகவரியை பார்க்கலாம்.

மறக்காதீங்க...!

கடைசி நாள் பிப்.,1 ஆம் தேதிக்குள் உங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023: The Tamil Nadu Government has introduced a short film festival competition under the 'Naan Muthalvan' scheme. Anyone between the age of 14 to 40 years can participate in the state level competition.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+