10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

தமிழக அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள ஃபிட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

 

நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்

பணி : ஃபிட்டர்

வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.19,750 முதல் ரூ.62,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.8.2020 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.townpanchayat.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Recruitment 2020: Application invited For Fitter Post at Tirunelveli
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X