தமிழக காவல் துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் (இளநிலை நிருபர்-Junior Reporter )பணிக்கென மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://eservices.tnpolice.gov.in. என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயது 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசின் சுருக்கெழுத்து தேர்வில் (ஷார்ட் ஹேண்ட் பயிற்சி) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.36,200/- முதல் ரூ.1,14,800/- வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 15.04.2024 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://eservices.tnpolice.gov.in. என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












