TNPL Mechanical Engineer Trainee Recruitment 2023
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், மெக்கானிக்கல் என்ஜினியர்கள் பயிற்சி பெற, ஓர் வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் அதிகபட்சம் மாதம் ரூ.31,500 வரை மாத ஊதியம் கிடைக்கப்பெறும்.
நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Graduate Engineer Trainee - (Mechanical)
பணியிடங்கள் எண்ணிக்கை: 5
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-03-2023
அஞ்சலில் அனுப்ப கடைசி தேதி - மார்ச் 22
கல்வித் தகுதி
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் அல்லது பி.டெக்., மெக்கானிக்கல் மற்றும் Production Engineering / Industrial Engineering ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 62 சதவீத மதிப்பெண் சராசரியாக பெற்றிருக்க வேண்டும். ஏனையோர் 75 சதவீதம் எடுக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்புவர்கள் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான கல்வி, முன் அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் செய்ய வேண்டும்.
ஊதியம்
முதல் ஆண்டு உதவித்தொகை - ரூ.27,900/-
இரண்டாம் ஆண்டு உதவித்தொகை - ரூ.31,500/-
பயிற்சி காலத்திற்கு பின், Junior Plant Engineer பணியிடத்திற்கான மாத ஊதியம் வழங்கப்படும். சம்பள விகிதம் ரூ.17,300-520-22,500 வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்பும் போது அஞ்சல் உறையின் மூது "APPLICATION FOR THE POST OF GRADUATE ENGINEER TRAINEE (MECHANICAL)" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
நோட் இட் ப்ளீஸ்...!
தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விபரங்களை பார்வையிட்டு, உரிய நேரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில், விண்ணப்பிக்க நாளை மாலை 5:00 மணி கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க, https://www.tnpl.com/ என்ற இணையதள முகவரி வாயிலாக விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
அஞ்சல் முகவரி
GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136,
KARUR DISTRICT, TAMIL NADU.
மறக்காதீங்க...! விண்ணப்பிக்க ஆன்லைனில் கடைசி தேதி: 15.03.2023
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
https://www.tnpl.com/work-with-us/
என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப கடைசி தேதி - 22.03.2023
பணியிட எண்ணிக்கை, ஊதியம், வயது வரம்பு உள்ளிட்டவைகள் பற்றி கூடுதல் விவரம் அறிய மேலே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ சுட்டியை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












