தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள Senior & Junior Research Fellow, Young Professional பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு இல்லை என்பதை மறக்காதீங்க... வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...! ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று நேர்காணல் நடக்கிறது.
நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்(TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
à Senior Research Fellow
à Junior Research Fellow
à Young Professional
விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் - ஆகஸ்ட் 30 மற்றும் 31
கல்வி தகுதி
Ø Senior Research Fellow பணிக்கு எம்.எஸ்.சி. வணிகவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ø Young Professional (JRF) பணிக்கு, பி.எஸ்.சி. வேளாண்மை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ø Junior Research Fellow பணிக்கு பி.டெக்., பி.இ. (Agricultural Engineering) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
Young Professional (JRF) - ரூ.25,000
Junior Research Fellow - ரூ.20,000
Senior Research Fellow - ரூ. 31,000
(நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு) ரூ.25,000 (நெட் முடிக்காதவர்களுக்கு).
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் 30.08.23 முதல் 31.08.2023 வரை நடைபெறுகிறது.
பதவிக்கு ஏற்றவாறு, நேர்காணல் நடைபெறும் இடம் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் போகும் முன் கிளிக் பண்ணுங்க.... சரியான முகவரிக்கு போய் சக்சஸ் பண்ணுங்க யூத்ஸ்...! முழு விவரங்களுக்கு.....!


Click it and Unblock the Notifications












