தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தாட்கோ என்று அழைக்கப்படுகிறது. இந்த தாட்கோ நிறுவனம் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசின் மூலமாகச் செய்து வருகிறது. தாட்கோ நிறுவனம் மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பிஎஸ்சி படிப்பு கற்பிக்கப்பட உள்ளது.
பட்டப் படிப்புகள் என்னென்ன?
தாட்கோ நிறுவனம் மூலம் பல்வேறு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நபர்கள், 3 வருட முழு நேர பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர்ந்து படித்து பயன் பெறலாம்.

படிப்பு விவரம்:
* பிஎஸ்சி (B.Sc -Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு,
* ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப் படிப்பு,
* பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் படிப்பு(Craftmanship Course in Food Production) * * Craftmanship Course in Food Production & Patisserie n & Patisserie),
* உணவு மற்றும் பானசேவையில் கைவினைத்திறன் படிப்பு (Craftmanship Course in Food Beverage Service ),
* பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, (Diploma in Bakery Diploma in Bakery & Confectionary),
* முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு,
* ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு(Diploma in Housekeeping Operation),
* உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டயப்படிப்பு (Graduate Diploma in Dietetics & Hospital Food Service Post Graduate) ,
* விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு (Post Graduate Diploma in Accommodation Operation & Management) போன்ற படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படிக்கலாம்.
எங்கு படிப்பது?
சென்னை தரமணியில் உள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். மேலும், இது சர்வதேச அங்கீகாரம் பெற்றதாகும். அமெரிக்க வணிக கவுன்சிலாலும் இந்த நிறுவனம் (Amercian Council of Business) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற இந்நிறுவனத்தில் பிஎஸ்சி பட்டப் படிப்பு கற்பிக்கப்பட உள்ளது.
படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.
தகுதிகள் என்னென்ன?
* இந்த வகையான படிப்பில் சேர்வதற்கு எஸ்சி மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
* 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் குறைந்தது45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பது அவசியம்.
* இப்படிப்புக்கான செலவுகள் அனைத்தும் தாட்கோவால் ஏற்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம்.
இணையதள முகவரி:
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
முழுமையான தகவல்களுக்கு http://iei.tahdco.com/htmgt_reg.php என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












