உலகளவில் புகழ்பெற்று விளங்கும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைடு நியூட்ரிஷன்' நிறுவனத்தில், பி.எஸ்சி., பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் அறிவித்துள்ளது.
படிப்பின் வாயிலாக, நாடு முழுவதும் உள்ள உயர்தர நிறுவனங்களில், நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு செய்யப்படும்; இந்த படிப்புக்கான கட்டண தொகையை, கல்வி கடனாக வழங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (TAHDCO)
மேலாண்மை : மாநில அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கொஞ்சம் படிங்க ப்ளீஸ்...!
சென்னை தரமணியிலுள்ள Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனம், ISO தரச் சான்று பெற்ற நிறுவனமாகும்.
இந்த நிறுவனம், மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். இந்த நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.
'American Council Of Business'ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள 'Lycee Nicolas Appert Catering' நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
'Hotel Management Institute Survey 2021'ன் படி, உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது.
'CEO WORLD MAGAZINE' நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில், (Hospitality & Hotel Administration) உலக தர வரிசையில் மொத்தம் 100 நிறுவனங்களில், 14வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
நல்ல வாய்ப்பு
இத்தகைய புகழ் பெற்ற நிறுவனத்தில், பிளஸ் டூ முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு, B.Sc. (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப் படிப்பும்; பத்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் படிப்பும், கைவினைஞர் (Craftmanship Course in Food Production & Patisserio) குறித்து கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
100 சதவீத பிளேஸ்மெண்ட்
படிப்பை நிறைவு செய்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில், நூறு சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றிட, 'தாட்கோ' வாயிலாக ஏற்பாடு செய்யப்படும்.
படிப்புக்கான கட்டண தொகையை, கல்வி கடனாக வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ /மாணவிகள், பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் 28 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.
ப்ளீஸ் நோட் பண்ணுங்க...!
ஆரம்ப கால மாத ஊதியமாக, ரூ.25,000/- முதல் ரூ.35,000/-வரை பெறலாம். பின்னர், தங்கள் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/ வரை ஊதியமாக பெறலாம்.
இந்த படிப்பிக்கு விண்ணப்பிக்க, 'www.tahdco.com' என்ற இணையதள முகவரியில், 14.09.2022 க்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவுக்கு இரண்டு நாள் தான் இருக்கு. மறந்துடாதீங்க மாணவர்களே...!
நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பு வாயிலாக கவனமாக படித்து அறிந்து கொள்ளவும்.
படிப்பு சார்ந்து எழும் கேள்வி, ஐயப்பாடுகள் குறித்து எளிதில் புரியும் வகையில்,
ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
பதிவு மற்றும் படிப்பு பற்றிய முழு விவரங்களுக்கு...!


Click it and Unblock the Notifications












