சுவாமி மலையில் வேலைவாய்ப்பு
முருகனின் நான்காம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்களுக்கு, இந்துக்கள் அல்லாதோர் விண்ணப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நிர்வாகம் : இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
இளநிலை உதவியாளர்
உதவி மின் பணியாளர்
உதவி பரிச்சாரகர்
ஸ்தானிகம்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 6
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.10.2022
கல்வி தகுதி
இளநிலை உதவியாளர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில், அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி மின் மணியாளர்
ஐ.டி.ஐ - மின்/மின்கம்பி பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (ITI - Wireman/Electrician). மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து, H சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.

உதவி பரிச்சாரகர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப சாப்பாடு மற்றும் பிரசாத உணவுகள் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஸ்தானிகம்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகமப் பள்ளி அல்லது வேத பாட சாலை தொடர்புடைய துறையில், குறைந்தபட்சம் ஓராண்டு காலம் படித்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 01.07.2022இல் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்; 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
சம்பளம்
இளநிலை உதவியாளர் - ரூ.18500-58600/-
உதவி மின் பணியாளர் - ரூ.16600-52400/-
உதவி பரிச்சாரகர் - ரூ.10000-31500/-
ஸ்தானிகம் - ரூ.10000-31500/-

விண்ணப்பிக்கும் முறை
www.swamimalaiswaminathar.hrce.tn.gov.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து,15.10.2022 க்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
முகவரி
துணை ஆணையாளர் / செயல் அலுவலர்,
அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,சுவாமிமலை.
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இணையதளம் க்ளிக் ப்ளீஸ்...!
https://www.swamimalaiswaminathar.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=18002
https://www.swamimalaiswaminathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php


Click it and Unblock the Notifications












